17.12.14- மரண அறிவித்தல்..

posted Dec 17, 2014, 12:54 AM by Liroshkanth Thiru   [ updated Dec 18, 2014, 12:47 AM ]
காரைதீவு 2ம் பிரிவை பிறப்பிடமாகவும் 11ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமுத்து மார்க்கண்டு(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்கள் 17.12.2014 இன்று காலமானார். 
அன்னார் காலஞ்சென்ற கந்தப்பர் தங்கக்காசி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் சௌந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திரவியம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும் காலஞ்சென்ற மயில்வாகனம், உருத்திரன் ஆகியோரின் மாமியாரும்
காலஞ்சென்ற இளையதம்பி மற்றும் முத்துப்பிள்ளை ஆகியோரின் மைத்துணியும்,
காலஞ்சென்ற தங்கநாயகி, கதானாயகி மற்றும் அழகுமலர் ,திருநாவுக்கரசு ஆகியோரின் சிறிய தாயும்.
மல்லிகா,மஞ்சுளா,வரதராஜன்,சுந்தரராஜன்,குமுதினி ,காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் உதயசேகர், உதயசுந்தர், உதயஸ்ரீதர்,உதயவேணி,உதயதர்சினி ஆகியோரின் அம்மம்மாவும்.
கோபாலசாமி, திலகேந்திரன்,கோசலாதேவி,சுபாஜினி,சிவநாதன்,சுபத்திரா,செல்வகாந்தி,ஸ்ரீரதிகுலதேவி,நிவேதிகா,சத்தியமோகன் ,வாஜீதன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 17.12.2014 பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில்  நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  தயவாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் அன்னாரின் குடும்பத்தினர்

 

Comments