20.05.15- 6ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted May 19, 2015, 6:21 PM by Habithas Nadaraja   [ updated May 19, 2015, 6:22 PM ]
பிறருக்கேன வாழ்ந்த பெருமகன் காரைதீவின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர்
அமரர் கனகசபை பத்மநாதனின் 6வது நினைவுநாள் இன்று
இதயம் இத்துயர்  சுமந்து ஆறு  ஆண்டுகளானாலும்
நித்தம் உம்மை நினைத்தே நிம்மதி இழக்கின்றோம்
துக்கமில்லாத இரவுகளை எங்களுக்குத் தந்துவிட்டு
நொடிப்பொழுதில் துயில் கொள்ளப் போனதுதெங்கே

தரணில் உம்பெயர் நிலைக்கப் பெயர்தந்து போனவர
நீங்கள் காரைதீவு மண்ணின் முத்து மட்டடு மின்றி,
முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் அண்ணா!
 மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்கள் 

உங்கள் மரணத்தை விடவும் வலியது 
 மக்கள் நலன்நோக்கிய பாதையில் நீங்கள் 
 நடந்தது சமுத்திரத்தை விடவும் பெரியது எங்கள் 
 மூச்சில் பேச்சில்வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்


  ஆசைமுகம் நேசப் புன்னகை மறக்கமுடியவில்லை அண்ணா!
 உம்மை காப்பாற்றப் பாடுபட்டோம் முடியவில்லை அண்ணா!
நிலையில்லாத வாழ்வில் பிறப்பு இறப்பு ஒன்று உண்டுசகோதர 
பாசமும் பந்தமும் பிரிவினில் முடிவில்லாத தொடரலையோ!

இதுவரை எங்கள் கண்ணீரும் காயவில்லை
மனக்கவலையும் ஆறவில்லைஉங்கள் 
ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி!   சாந்தி!   சாந்தி!   
           


என்றும் உங்கள் நினைவுகளுடன் 
உங்கள் அன்பு சகோதரி பராபரம் துளசிரஞ்சன்
மற்றும் சகோதரங்கள்.
Comments