22.09.2013- கண்ணீர் அஞ்சலிப் பாக்கள்..

posted Sep 22, 2013, 3:01 AM by Web Admin   [ updated Sep 22, 2013, 6:51 AM by Unknown user ]
 " கண்ணீர் அஞ்சலி "
 
மணிகள்  உருண்டு நாட்கள்  வேகமாக ஓடினாலும்,
நீ எங்களை பிரிந்து 24 மணித்தியாலங்கள் ஆகிறது.
உன்னை பிரிந்த அந்த ஆகஸ்ட் 21 திகதியின்
வேதனையை இன்றல்ல என்றும் அனுபவிப்போம் !

நீ கடவுளிடம் சென்றுவிட்டாய். ஆகையால் நான்
பூமியிலிருந்து உன்னை வாழ்த்துகிறேன்.
மறுபடியும் இங்கு பிறந்திட வேண்டுகிறேன்.

மறுபடியும் நாம் இருவரும் பிரிந்தால், நீ எனக்கு
மீண்டும் மருமகனாக நீண்ட ஆயுளையும் இறைவன்
தரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்
உன் உறவுகளில் ஒருகுடும்பம்.  

என்றென்றும் உன் நினைவோடு வாழும் உயிரில்
ஒருவனாக நீண்ட தூரத்திலிருக்கும் கொந்திராத்து
காசுபதி மகன் குமாரும் + குடும்பமும். ஜெர்மனி.

  " கண்ணீர் அஞ்சலி "

       அன்புச் செல்லம் கிஷான்,

என் உயிரில் ஓடுவது உதிரம் என்றாலும்,
உன் நினைவுகள் அதில் கலந்திருப்பதால்,
எனக்கு உயிரூட்டி கொண்டிருக்கிறது !

உறங்கும் என் விழிகளுக்கும், உறங்கா என்
இதயத்திற்கும்- உன் நினைவுகள்தான்
சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது !

உறவுகள் என் அருகே ஒருங்கே சுயநலமாக
இருந்தாலும்- என் உணர்வுகள் எல்லாம்
உன்னை மட்டுமே நாடுகிறது !

நீ எங்களருகில் இருந்தபோது - உன் நினைவுகள்
 வாழ்வின் சந்தோஷமாக இருந்தது - இன்று
அந்நினைவுகள் காகிதத்தில் எழுத்துக்களாகிப் போனது !

உன் பிரிவிற்கான நியாயம் கேட்டு- கருணையின்
தீர்ப்பை எதிர்பார்க்கும் நிலையில்
இறைவனின் தீர்ப்பு வந்துகொண்டிருக்கிறது !

உன் நினைவுகள் மட்டுமே எங்கள் உள்ளத்தை ஆளும். !!!!

 அதன் நினைவில் நீண்ட தூரத்திலிருக்கும்
கொந்திராத்து காசுபதி மகன் குமாரும் + குடும்பமும்.
ஜெர்மனி.      
 
Comments