30.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 30, 2014, 10:19 AM by Web Admin   [ updated Jan 31, 2014, 1:32 AM by Unknown user ]
திருமதி. செல்லம்மா ஞானமுத்து அவர்கள் 30.01.2014 இன்று காலமானார்.

காரைதீவு-02ம் பிரிவைச்சேர்ந்த திருமதி. செல்லம்மா ஞானமுத்து அவர்கள் 30.01.2014 இன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரி, சந்தானலெட்மி அவர்களின் அன்புத் தாயாரும், சிதம்பரம்(இலங்கை துறைமுக அதிகாரசபை), உமாராணி, காலம்சென்ற மனோரஞ்சிதன், காலம்சென்ற கணேசானந்தன், ஜெயகிருஷ்ணா, தயாபரன்(லண்டன்), தயாநிதி, பிரேமானந் (பொது முகாமையாளர், MPCS காரைதீவு)ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (31.01.2014) காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 
 

 " கண்ணீர் அஞ்சலி "
என்நினைவிலாடும்
செல்லிப் பெரியம்மாவே....!.
எனது சந்தோசத்துக்காக -அன்று
வாழ்ந்த தாய்...!
எனது  சோகத்தில் துணையாய்
நின்ற தாய் ...!
எங்களையே உலகம் என்று
வாழ்ந்த தாய்....!
எனது இன்ப துன்பங்களை
மறைத்து வாழ்ந்த தாய்....!
எனெக்கொரு சிறந்த ஆசானாய்
இருந்த தாய்....!
எங்களுக்கு ஒரு தாயாகவும்...,
உறவாகவும்..., இருந்த தாய்...!
செல்லிப்பெரியம்மா...........
நீ அருகில் இருந்த பொழுது
உன் அருமை தெரியவில்லை...,
தொலைவில் சென்றபின்
தெய்வமாய் தெரிகின்றாய்......!
உன் நினைவுகள் எழும்போது
வருவது கண்ணீர் .மட்டுமல்ல ...,
கடந்த என் சிந்தனையும்தான்.....!
அந்த தாயின் பிரிவின் நினைவில்
 
கொந்திராத்து காசுபதி மகன்: குமாரோடு+ குடும்பம். ஜெர்மனி .

Comments