30.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 30, 2015, 10:22 AM by Liroshkanth Thiru   [ updated Sep 30, 2015, 11:53 PM ]
R.K.M வீதி, காரைதீவு 01ம் பிரிவைச் சேர்ந்த, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அமரர். செல்வன். ராசு தேசாலக்சன் அன்னார் 30.09.2015 நேற்று அகால மரணமடைந்தார்.

அன்னார் ராசு - பிரேமிகா தம்பதிகளின் அன்பு மகனும், கிசாளினியின் அன்பு சகோதரரும்  காலஞ்சென்ற தங்கேஸ்வரி கணேசமூர்த்தி மற்றும் பாக்கியராஜா இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு பேரனும், கோணேஸ்வரன் ,தயாழன், வரதராஜன் (சிறைச்சாலை உத்தியோகத்தர் மட்டக்களப்பு) அனோஜன்(பொலிஸ் உத்தியோகத்தர், கந்தளாய்) , சினோகாந் ஆகியோரின் மருமகனும் . ஜெயசிறி , செல்வா, புஸ்பகரன், ரஜ்சினி, சாந்தினி, பாக்கியராஜா சாந்தினி , சறோஜினி , சூசிகா ஆகியோரின் மருமகனும்,
ராகவன், ரகுவரன் ஆகியோரின் மகனும் . அபர்ணா , தனுஸ்காந், சஜா, ஜெய்ஸ் ஆகியோரின் மச்சானும் . சுஜன், சஞ்ஜெய் ஆகியோரின் அத்தானும் நிருர்சனின் அண்ணனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01.10.2015 அதாவது இன்று பிற்பகல் 5 மணிக்கு காரைதீவு பொது மயானத்தில் நடைபெறும் .

தகவல் : குடும்பத்தினர்


Comments