"கண்ணீர் அஞ்சலி"...

posted Apr 3, 2015, 8:16 PM by Web Admin
அன்பான அத்தான்.....

நீராகிப்  போன  எமது விழிகளின் ஓரங்களில் 
            தெரிகின்றது உமது உருவம்...!

உங்களது நினைவுகள் மட்டும் இங்கே இருக்க ;
நிஜங்களாகிய நீங்கள் சென்றது எங்கேயோ...?,

அழிக்க முடியாத உம் முகம் மெல்ல தெரிகின்றது எமது கனாக்களில்..!
மாளாத துயரங்கள் கூட அதில் மறைகிறது ஏனோ தானாக...! 

நேரில் நாங்கள் தானோ வரமுடியா என்று இன்று நீர் மடிசாய்ந்து 
அழத்துடிக்கின்ற எம் மனதில் மெல்லியதாய், வந்தது கனவிலேயே
என்று சொல்லி எங்கேயோ மறைகிறீர்கள் காற்றாக...!

"உங்களுக்கு தெரியாது" வந்தது உண்மையாக இருந்தாலும் கூட
நீங்கள் வாழ்வது எமது உயிர்களுக்குள் என்று.....!!!!  

மீண்டும் பெறமுடியா சொத்தை இழந்த மலர் அக்கா, 
வதனி, பிரதீபன், பேரக்குழந்தைகள், ஆகியோருக்கு 
ஆறுதல் சொல்ல வசனமின்றி எங்கள் கண்ணீரை 
எழுத்தாக்கியதோடு மட்டுமில்லாமல் மற்றும் 
குடும்ப உறவுகள், நட்புகள், அனைவரோடு 
நாங்களும் எங்கள் குடும்பமும், இந்நாளை எண்ணி 
அந்த ஆன்மா இறைவனின் திருவருடி நிழலில் 
இழப்பாற கடவுளை வேண்டிக் கொள்கின்றோம் !!!

 நினைவோடு ஏங்கும்............... 
காசுபதி மகன் ( கே.சி.கே.) குமாரோடு  
              ++++ குடும்பமும்.
  
"கண்ணீர் அஞ்சலி"...

மருத்துவர் திரு பரராஜசிங்கம் அவர்களுக்காக....

அன்பான அத்தான்.......................

" புநரபி     ஜநநம்   புரநபி    மரணம் 
              புநரபி   ஜநநீஜட  ரே   ஸயநம் :...!

 இஹ   ஸம்ஸாரே    ப ஹீது ஸ்தாரே 
              க்ருபயா பாரே    பாஹி   முராரே ....!!

 கு ருசரணாம்பு    ஜநிர்ப   ரப   க்த :
              ஸம்ஸாராத      சிராத்  ப  வ    முக்த : ...! 

 ஸேந்த்   ரியமாநஸநியமாதே  வ 
              த்  ரஷ்யஸி   நிஜஹ்ருத  யஸ்தம்  தே  வம் ..!!

Comments