08.11.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Nov 8, 2012, 12:11 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:50 AM ]
திரு.கந்தையா.செல்லையா அவர்கள் 08.11.2012 அன்று காலமானார்.
 
அன்னார் கரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு லயன்ஸ் நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், காலஞ்சென்ற கனகம்மாவின் (ஆசிரியை) அன்புக் கணவரும், வானதி இராஜேந்திரா, அருள்மொழி (சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம்), காலஞ்சென்ற இளங்கோவன்(கனடா),  இளங்குமரன் (பேராசிரியர், யாழ் பல்கலைக் கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (09.11.2012)  பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் மட்டக்களப்பு  இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 

09.11.2012- கண்ணீர் அஞ்சலி..
அமரர் திரு.கந்தையா.செல்லையா அவர்களுக்கு...


Comments