உலகெங்கும் வாழும் மக்கள் தங்கள் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள
ஆவலாக இருப்பார்கள். காரைதீவில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை  உங்கள் கண்முன்னே நிறுத்தும் ஓர் முயற்சியே இந்த இணையத்தளம். இதில் நமது ஊரைப் பற்றிய செய்திகள், தகவல்கள், முக்கிய நிகழ்வுகள், அறிவித்தல்கள், கட்டுரைகள் என அனைத்தும் இடம்பெறும்
.

எம்மைப்பற்றி

        வித்தகனின் புனித நாமத்தால் விளங்கும் காரேறு மூதூராம் காரைதீவுப் பதிதனில் உதித்தவர்கள் நாம் என்பதற்கிணங்க எம்மூரின் செழுமை, சிறப்புக்களையும் நமது கிராமத்தின் தற்போதைய நிலமைகளையும் நவீன யுகத்தின் வேகத்திற்கு சற்றும் சளைத்தவர்களல்ல நாம் என்பதற்காக உடனுக்குடன் தகவல் பரிமாற்ற சாதனங்களுடாக எம் புலம்பெயர் உணர்வாந்த இதயங்களுடன் ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக www.karaitivunews.com எனும் இவ் இணையத் தளத்தினூடாக நாம் கால்பதிக்கின்றோம்.

        எம்மால் முன்னெடுக்கப்படும் இச்சிறிய சேவையினை எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக முன்னெடுத்து புலம்பெயர் உறவுகளுடன் ஓர் உறவுப்பாலமாகத் திகழ எண்ணியுள்ளோம். இம் முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரினதும் ஆசியினையும் வேண்டி நிற்கின்றோம்.

        மேலும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றோம். ஏனெனில் விமர்சனங்கள் மூலமே ஓர் செயற்பாட்டினை வெற்றிபெறச்செய்யலாம் என்பது எம் எண்ணம்.

" காலத்தை வென்றவர்கள் நாமாவோம்"

நன்றி.

~இணைய குழு~


 

எமது நோக்கு

  • எமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தூரஇடங்களில் வசிப்பவர்களுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் தெரியப்படுத்தல்.

எமது குறிக்கோள்

  • காரைதீவின் சிறப்புக்களை உலகறியச் செய்தல்.