01.01.15- சுயம்புலிங்க தரிசனம் நாளை 2ம் திகதி காரைதீவில்..

posted Dec 31, 2014, 7:54 PM by Liroshkanth Thiru
பகவான் ஸ்ரீ  சத்தியசாயிபாபாவின் புட்டபத்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவிற்கு போடப்பட்ட ஆசனத்தில் (இருக்கையில்) தோன்றிய சுயம்புலிங்கத்தினை நாளை 02.01.2015ம் திகதி வெள்ளிக்கிழமை  காரைதீவு பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையத்திற்கு பக்தர்களின் தரிசனத்திற்கு கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சுயம்புலிங்கமானது பக்தர்களின் தரிசனத்திற்காக 2ம் திகதி பி.ப 2.30 - 4.30 வரை காரைதீவு பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையத்தில் வைக்கப்படும்.

தகவல்- சாயிசேவாநிலையம் காரைதீவு


Comments