01.01.15- ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சி அலுவலகம் காரைதீவில் திறப்பு...

posted Dec 31, 2014, 6:37 PM by Liroshkanth Thiru
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுஜனஐக்கியமுன்னணியின் பொத்துவில் தொகுதிக்கான கட்சிஅலுவலகம் காரைதீவில் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொத்துவில் தொகுதி இணைப்பாளரும் அமைச்சர் தயாரத்னாவின் இணைப்பாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் தேர்தலுக்கான அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மொகமட் சயீட் மற்றும் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எ.எம்.எ.மஜீட் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளர் எஸ்.குமாரஸ்ரீ ஆகியோர் அதிதிகளாகக்கலந்துகொண்டு திறந்துவைப்பதையும் அவர்கள் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா
Comments