01.01.15- மதுபானசாலையின் புதுவருட அனுமதியினை இரத்து செய்ய மகஜர்..

posted Dec 31, 2014, 5:58 PM by Liroshkanth Thiru
காரைதீவில் அமைந்துள்ள மதுசாலையின் 2015ம் வருடத்திற்கான அனுமதிப்த்திரத்தை இரத்து செய்வது தொடர்பான மகஜர் கையளிப்பு நிகழ்வு நேற்று(31) காரைதீவு பிரதேச செயலகத்தில் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் உள்ள சகல ஆலயகளின் பிரதிநிதிகள் மற்றும் தர்மகர்த்தாக்கள், பிரதேச சபை தவிசாளர், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காரைதீவு பிரதேசசெயலாளரிடம் புதுவருடத்திற்கான மதுசாலையின் அனுமதிபத்திரத்தை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் காரைதீவில் உள்ள 116 சமய சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றையும் பிரதேசசெயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந் அவர்களிடமும் கிழக்குமாகாண மதுவரி ஆணையாளர் திரு.என்.சோதிநாதன் மற்றும் கல்முனை பிராந்திய மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி திரு.ரி.தயாலீஸ்வரகுமார் ஆகியோரிடமும் கையளித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலாளர்  பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறியதுடன் எதிர்வரும் 3 மாதத்திற்குள் மதுசாலை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதனை ஏற்றுகொண்டு கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் பிரதேச செயலாளருக்கு நன்றிகளையும் கூறினர்.

நன்றி: டிலக்சன்

Comments