01.01.16- இன்று கல்விப்பணிப்பாளர் புவனேந்திரன் பிரான்ஸ் பயணம்!

posted Dec 31, 2015, 5:49 PM by Liroshkanth Thiru
இன்று கல்விப்பணிப்பாளர் புவனேந்திரன் பிரான்ஸ் பயணம்!
நேற்று கல்வியமைச்சில் கல்வியமைச்சர் வழியனுப்பினார்!
(காரைதீவு  நிருபர்)

சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் இன்று 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலமைப்பரிசில்பெற்று பிரான்ஸ் பயணமாகின்றார்.

காரைதீவைச்சேர்ந்த திரு.புவனேந்திரன் கல்விஅமைச்சின் சிபார்சில் திட்டமிடல் துறையில் மேற்படிப்புக்காக புலமைப்பரிசில்பெற்று இன்று பிரான்ஸ் பயணமாகின்றார்.

வயதில்குறைந்த திட்டமிடல்துறையில் அனுபவமிக்கவர் என்ற அடிப்படையில் தெரிவான திரு புவனேந்திரனுடன் இலங்கையிலிருந்து நான்கு கல்விப்பணிப்பாளர்கள் இன்று பிரான்ஸ் பயணமாகின்றனர்.

06மாதகாலம் பாரிசிலுள்ள  பல்கலைக்கழகத்தில் இவருக்கான பயிற்சி நடைபெறும். இவருடன் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஜெரால்ட்அன்ரனி காலியைச்சேர்ந்த ஜிரோமி கண்டியைச்சேர்ந்த  திசாநாயக்க ஆகியோர் பயணமாகின்றனர்.

கல்வியமைச்சில் வழியனுப்பும் நிகழ்வு!
கல்வியமைச்சின் புலமைப்பரிசில்பெற்று பிரான்ஸ் மற்றும் இந்தியா செல்லும் திட்டமிடல் கல்விப்பணிப்பாளர்களை வழியனுப்பும் நிகழ்வு நேற்று கல்வியமைச்சில் இடம்பெற்றது. 

கல்வியமைச்சர் அகிலவிராஸ் காரியவாசம் கலந்தகொண்டு இலங்கை சார்பில் மேற்படிப்புக்காக செல்லும் தாங்கள் இலங்கையின் நன்மதிப்பை பேணி நல்லபயிற்சிபெற்று நாட்டுக்கு நல்லசேவையாற்றவேண்டும் எனக்கூறி பயணச்செலவுகளை வழங்கிவைத்தார்.

நாட்டிலிருந்து 20 கல்விப்பணிப்பாளர்கள் இந்தியா புதுடில்லியில் நடைபெறும் 15 நாள் பயிற்றிசெயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுக்கான வழியனுப்பலும் ஒன்றாகவே நடந்தது.Comments