01.01.16- தமிழ் மக்கள் தரணியில் தலைநிமிர்ந்து வாழ புத்தாண்டு வழிகாட்டுமா? ஜெயசிறில் வாழ்த்து!

posted Dec 31, 2015, 6:10 PM by Liroshkanth Thiru
தமிழ்மக்கள் தரணியில் தலைநிமிர்ந்து வாழ  புத்தாண்டு வழிகாட்டுமா?
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை முக்கியஸ்தர் ஜெயசிறில் வாழ்த்து!
(காரைதீவு  நிருபர்)

இலங்கைத் திருநாட்டின் தமிழ்மக்கள் தரணியில் தலைநிமிர்ந்து நிரந்தர சமாதானத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ பிறந்துள்ள புத்தாண்டு வழிசமைக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் நம்பிக்கை ஒளியின் கிழக்குமாகாண இணைப்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நல்லாட்சியை வித்திடுவதில் கணிசமான பங்கை இந்த நாட்டு தமிழ்மக்கள் வகித்திருந்தபோதிலும் இன்னும் நியாயமான ஆட்சி தமிழ்மக்களைப்பொறுத்தவரையில் திகழவில்லை என்பதே உண்மை.

சிறையில்வாடும் தமிழ்அரசியல்கைதிகளின் விவகாரம் முதல் கல்முனை தமிழ்ப்பிரதேசசெயலகம் வரை  இன்னும் தீர்வென்பது எட்டாக்கனியாகவேயுள்ளது. 

நல்லாட்சியின் பங்காளர்களான தமிழ்மக்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்திநிற்கின்றது. நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகிட்டாவிடின் சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவது சாதாரணமானதே.

எனவே பிறந்துள்ள புத்தாண்டிலாவது தமிழ்மக்களது நீண்டகால பிரச்சனை தீர்க்கப்பட்டு பிராந்திய பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும்.
Comments