01.01.17- காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாதவூரடிகள் புராணமும் சமய சொற்பொழிவுகளும்..

posted Dec 31, 2016, 7:15 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் 02.01.2017 தொடக்கம் 11.01.2017 வரையுள்ள நாட்களின் திருவெம்பாவை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இத் தினங்களில் மூன்றாவது முறையாக காரைதீவு உகந்தை யாத்திரிகை சங்கத்தின் ஏற்பாட்டில் திருவாதவூரடிகள் புராணமும் சமய சொற்பொழிவுகளும் ஆலய தலைவர் திரு.மா. புஸ்பநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் அனைத்து பக்த அடியார்களும் கலந்து ஆன்மீக அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் ஏற்பாட்டு குழுவினர்.

Comments