01.01.17- மழையுடன் விடைபெற்று மழையுடன் மலர்ந்தது புத்தாண்டு..

posted Jan 1, 2017, 12:59 AM by Habithas Nadaraja
மழையுடன் விடைபெற்று மழையுடன் மலர்ந்தது: ஆலயங்களில் மக்கள் பெருமளிவில் வழிபாடு கிழக்கில் விவசாயிகள் மகிழ்ச்சி!

கடந்தாண்டு மழையுடன் விடைபெற்றது. புதிய ஆண்டும் மழையுடன் மலர்ந்திருக்கிறது.

கிழக்கில் விவசாயிகள் மகிழ்ச்சி. நீண்டநாட்களாக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து வான்மேல் விழிவைத்துப்பார்த்திருந்தனர்.ஆண்டு மாற்றத்துடன் அது ஓரளவு நிறைவேறியிருக்கிறது.

மக்கள் குதூகலத்திலுள்ளனர். காலையில் ஆலயங்களில் புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. மழைக்குமத்தியிலும் மகக்ள் ஆலயத்திற்கு சென்று வந்தனர்.

காரைதீவு சகா
Comments