01.02.15- 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் 5ம்ஆண்டு நிகழ்வு....

posted Feb 1, 2015, 2:36 AM by Habithas Nadaraja   [ updated Feb 1, 2015, 9:46 AM by Web Admin ]

காரைதீவு 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் 5ம்ஆண்டு நிறைவினையொட்டி வருடாந்த ஒன்று கூடலும் பரிசளிப்பு நிகழ்வும் 01.02.2015ம்திகதி க/மு விபுலானந்தா மத்திய கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திரு.யோ. கோபிகாந்த் ( தவிசாளர், பிரதேச சபை, காரைதீவு)  திரு.க. தட்சணாமூர்த்தி( உப  தவிசாளர், பிரதேச சபை காரைதீவு), திரு.ரி.வித்தியராஜன்(அதிபர், விபுலாநந்தா மத்திய கல்லூரி)  திருமதி.  நிஷாந்தினி( மனித உரிமை பணிப்பாளர், அக்கரைப்பற்று)   திரு. கணேஸ்( அமைப்பாளர், மாணவர் மீட்புப் பேரவை) திரு. R.ரதீஸ்குமார் (முகாமையாளர், செலிங்கோ நிறுவனம் கல்முனை)  திரு .கி.ஜெயசிறில், முருகன் க்கிய சங்க அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, பிரதீபாபிரபா விருது பெற்றமைக்காக பாராட்டி அதிபர் திரு.ரி.வித்தியராஜன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அறநெறிமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
karaitivunews.com
Comments