01.02.2014- பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக் கூட்டம்..

posted Jan 31, 2014, 6:50 PM by Web Admin   [ updated Jan 31, 2014, 6:53 PM ]
காரைதீவு விஷ்ணு வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிருவாக சவையானது நேற்றுமுன்தினம் பி.ப.4.30 மணிக்கு பாடசாலை அதிபர் எம்.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி பரதன் கந்தசாமி, PSI- இணைப்பாளர் திரு. சிவசுந்தரமூர்த்தி, பழைய மாணவர் சங்கப் பிரதிநிகளான யோ.கோபிகாந்த், ரி.ஜெகதீபன் ஆகியாரும் கலந்துகெண்டனர். இந்நிகழ்வின்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக ரி.விநோதராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். மேலும், கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின்படி அனைத்துப்பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கம்வகிக்க வேண்டும் என்பதுடன் அங்கத்துவப் பணமும் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துப் பெற்றோர்களினது நேரதாமதமின்றிய பிரசன்னமும் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்து.

Comments