01.03.17- விபுலானந்தா மத்திய கல்லுரியின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்..

posted Feb 28, 2017, 5:22 PM by Habithas Nadaraja   [ updated Feb 28, 2017, 5:34 PM ]
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லுரியின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லுரி முதல்வர் திரு. வித்தியராஜன் தலைமையில்  இன்றைய தினம் காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மற்றும் 367 புள்ளிகளை பெற்று குறுஞ்சி இல்லம் மூன்றாம் இடத்தையும் 434 புள்ளிகளை பெற்று முல்லை இல்லம் இரண்டாம் இடத்தையும் 448 புள்ளிகளை பெற்று மருதம் இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றது.

Comments