01.04.16- ''உயிர்களைக் காக்க உதிரம் வழங்குவோம்'' நிகழ்வு..

posted Apr 1, 2016, 7:25 AM by Web Admin
காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்றய தினம், காரைதீவு பிரதேச செயலகமும் அக்கரைப்பற்று லயன்ஸ் கழகமும் இணைந்து நடாத்திய ''உயிர்களைக் காக்க உதிரம் வழங்குவோம்'' எனும் தொனிப் தொனிப்பொருளின் கீழான இரத்ததான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வு, காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றதோடு, சிறப்பு அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் பொறுப்பு வாய்ந்த முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 
இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகறாணி கிருபைராஜா, கணக்காளர் ஜனாப். யூ.எல்.ஜவாஹீர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
படம்: அகல்யா


Comments