01.05.16- கொழுத்தும் வெயிலிலும் முருங்கை செய்கை பயன் தந்தது..!!

posted Apr 30, 2016, 8:22 PM by Web Admin
காரைதீவின் 7ம் பிரிவில் முருங்கைப் பயிர்ச்செய்கை பிரபல்யமானது. அதிலும் முருங்கை வீதியென செல்லமாக அழைக்கப்படும் விஷ்ணுவித்தியாலய வீதியின்  மருங்கில் இம்முறையும் கொழுத்தும் வெயிலிலும் அதிகளவிலான காய்களை காய்த்து சொரிந்துள்ளது.
 
இது தொடர்பில் செய்கையாளர்களிடம் வினவியபோது, வெயிலின் தாக்கம் முருங்கை மரத்திற்கு இல்லையென கூறியதுடன் வழமைபோன்றே நீர்ப்பாஷணம் செய்வதாகவும் இவ்வெயிலின்தாக்கத்திலிருந்து சூட்டை தணிப்பதாகவும், எல்லாவற்றிற்குமேலாக பொருளாதாரத்தினை ஈட்டித்தருவதாகவும் கருத்துரைத்தனர்.Comments