01.05.2013- காரைதீவில் இந்து எழுச்சி இளைஞர் அமைப்பு..

posted May 1, 2013, 10:55 AM by Web Team -A
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தினரால் காரைதீவில் கிராமசேவகர் பிரிவு தோறும்(12) இந்து எழுச்சி இளைஞர் அமைப்புக்களை உருவாக்குதல் செயற்றிட்டத்தின் முதல் அங்கமாக காரைதீவு-03ம் பிரிவிற்கான  இந்து எழுச்சி இளைஞர் அமைப்பினை இன்று ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய மண்டபத்தில் சங்கத்தலைவர் எஸ். மணிமாறன்(அதிபர்) தலைமையில், உப தலைவர் இரா. குணசிங்கம் மற்றும் செயலாளர் கே. ஜெயராஜியின் வழிகாட்டலில் காரைதீவு-03ம் பிரிவிற்கான இந்து எழுச்சி இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக கே.விஜயராணியும், செயலாளராக எஸ்.மிருசாந், பொருளாளராக கே. டினோஜிகாந்த் மற்றும் இணைப்பாளராக பீ. சசியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இவ்  இந்து எழுச்சி இளைஞர் அமைப்பின் மூலம் கலை, கலாச்சார மற்றும் விழுமியங்களை கட்டியெழுப்பும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

     


Comments