01.05.2014- பஞ்சபுராணம் ஓதும் பயிற்சி வகுப்பு..

posted May 1, 2014, 8:29 AM by Web Admin
காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத் தலைவர் திரு.அருளானந்தம் அவர்களின் முன்னெடுப்பில் இடம்பெற்றுவரும் இந்து சமயத்தினைகட்டியெழுப்பும் செயற்றிட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லான பஞ்சபுராணம் ஓதும் பயிற்சி வகுப்பானது கடந்த 27.04.2014 அன்று சங்கத்தின் தலைவரின் தலைமையில் காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் ஆலயத்தலைவர் திரு.புஸ்பநாதனின் ஒருங்கமைப்புடன் இடம்பெற்றது. 

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பஞ்சபுராணம் அச்சுப்பதித்த பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதன்பின்னர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இவற்றிற்கான பொருளாதார உதவிகளை காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திரு.தவராஜா, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ராஜு மற்றும் யுஐயு கல்முனைக் கிளை முகாமையாளர் மிருசாந்த்  ஆகியோர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Written By: Mirusanth

karaitivunews.com

More Pictures..
Comments