01.06.15- கால் இறுதி போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் காரைதீவு VSC வெற்றி..

posted May 31, 2015, 11:05 PM by Liroshkanth Thiru
நிந்தவூர் இம்ரான் பிறிமியர் லீக் (IPL) சுற்றுப் போட்டியின் கால் இறுதிப் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் (VSC) வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய VSC அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கற்றுக்கள் இழப்பிற்கு  191 ஓட்டங்களைப் பெற்றனர்.
விஜிகரன் 49 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களையும் , கபிலன் 20 பந்துகளிற்கு 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை யங் பேட்ஸ் அணியினர் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவினர்.

பந்து வீச்சில் VSC சார்பாக அனோஜன் 4 பந்துவீச்சு ஓவர்களை வீசி 3 விக்கற்றுக்களை கைப்பற்றினார்.

நன்றி : கஜன்


Comments