01.06.15- காரைதீவு ஸ்ரீ கண்ணகைஅம்மனுக்கு மடி ஏந்தி பிச்சையெடுத்தல் நிகழ்வு..

posted May 31, 2015, 9:41 PM by Unknown user   [ updated May 31, 2015, 9:44 PM ]
மடிப்பிச்சை என்பது இரத்தலின் உச்ச நிலை ஆகும். இது இறைவனிடமோ அல்லது இறைவன் பெயரால் மனிதரிடமோ மிகவும் இறைஞ்சிக் கேட்கப்படும் பிச்சை ஆகும். மடிப்பிச்சை கேட்டால் கண்டிப்பாகப் பிச்சை வழங்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆலயங்களில் வேண்டுதல்களுடன் இறைவனிடம் மடிப்பிச்சை எடுப்பர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தின் ஓர் நிகழ்வான அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வானது சற்றுமுன்னர் நந்தவன​ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்தை சுற்றியுள்ள பிரதேச வீதிகளினூடாக  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.  இதன்போதான படங்களை காணலாம்..


karaitivunews.com

more photos..

Comments