01.06.2013- சிவாச்சித்தர் வழிபட்ட விநாயகர் ஆலயப்புனரமைப்பு..

posted Jun 1, 2013, 11:53 AM by Web Team -A
காரைதீவு 12ம் பிரிவிலுள்ள கண்ணகிபுரத்தில் சமகாலத்தில் வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி காரைதீவில் சமாதியடைந்த சிவாச்சித்தரால் (சிவாச்சாமி) பல தசாப்தத்திற்கு முன் விநாயகர் ஆலயமைத்து வழிபட்டதுடன் தனது தியானத்தினையும் மேற்கொண்டு பக்த அடியார்களுக் அருளாசிகளினை வழங்கிவந்ததுடன் காரைதீவிலேயே சமாதியடைந்த பின்னர் அப்பகுதியில் வசித்தவர்களினால் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு வந்தது.
பின்னர், சுனாமியலைத் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த இவ்வாலயத்தினை புனருருத்தானம் செய்து அப்பகுதி மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக விடப்படவேணடும் எனும் நோக்கில் காரைதீவு இந்து விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் நிருவாகத்தினரின் ஒத்துழைப்புடன் காரைதீவுப் பிராந்திய சமூகசேவையாளர்களின் பூரண ஒத்துழைப்புடனும் இன்றையதினம் ஆலய புனருருத்தானத்துடனான சிரமதானத்தினையும் அப்பிரதேசம் பூரான சமூகமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முறையிலான சுத்தமாக்கல் பணியும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும், இறுதியில் ஆலயபுனருருத்தான வேலைத்திட்டம் முடிவுற்றதன் பின்னர் விநாயகப் பெருமானுக்கு பொங்கல் படைத்து பூசை செய்யப்பட்டது. பின்னர் அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டதான நிருவாக சபையினர் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அப்பகுதியினைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. 
karaitivunews.comComments