01.07.2013- "விபுலம்" அமைப்பினரின் புலமைப்பரிசில் பரீட்சைக் கருத்தரங்கு..

posted Jun 30, 2013, 11:35 PM by Web Team -A   [ updated Jul 1, 2013, 8:59 AM ]
காரைதீவு "விபுலம்" சமூகசேவை அமைப்பினரின் கன்னிமுயற்சியான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முழுநேர இலவசக்கல்விக் கருத்தரங்கானது மனித அபிருத்தித் தாபனத்தின் அனுசரனையுடன் நேற்றைய(30.06.2013) தினம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.கலையரசன், விபுலானந்தா மத்திய கல்லூரி அதிபர் திரு.வித்தியராஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. சு.பாஸ்கரன் மற்றும் "விபுலம்" அமைப்பின் அங்கத்தவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நன்றி: கவிதாஸ்
karaitivunews.com


Comments