01.06.2014- நாளை காரைதீவில் திருக்குளிர்ச்சி விழா ஆரம்பம்..

posted Jun 1, 2014, 1:49 AM by Web Admin
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி விழா நாளை 02ஆம் திகதி திங்கட்கிழமை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகிறது. திருக்குளிர்ச்சிபாடும் நிகழ்வு 10ம் திகதி திங்களன்று அதிகாலை நடைபெறும்.
நாளை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடல் வைபவம் நடைபெற மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு சடங்கு பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலும் இடம்பெறும். பின்பு 04ம் திகதி முதல் 08ம் திகதி வரை மதியம் 1 மணி பூஜையும் மாலை 7மணி சடங்கு பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும். 09ம் திகதி திங்கட்கிழமை பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெல்குற்றும் நிகழ்வு இடம்பெற்று 10ம் திகதி செவ்வாய்க்கிழமை உதயம் 4.30 மணிக்கு திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவடையும்.
எட்டாம் சடங்குப்பூஜை 16ம் திகதி திங்களன்று இரவு 7 மணிக்கு நடைபெறும்.

தகவல்: காரைதீவு  நிருபர்

Comments