01.07.19- காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தின் மாபெரும் அன்னதான நிகழ்வு..

posted Jun 30, 2019, 6:48 PM by Habithas Nadaraja
வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ உகந்தை முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றதினத்தன்றும் அதற்குமுதல்நாளும் காரைதீவு உகந்தை யாத்திரை சங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவு உகந்தை யாத்திரை சங்கத்தின் அன்னதான மண்டபத்தில் அன்னதான நிகழ்வு வருடாவருடம் நடைபெறுவது வழமை அதேபோல இம்முறையும் அன்னதான நிகழ்வு 02.07.2019,03.07.2019ம்திகளில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர்.
 
குறிப்பு கடந்த ஆண்டு அவ் அன்னதான நிகழ்வுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தினர் தமது மனமுகந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றனர். இவ் அன்னதான நிகழ்வில் உங்கள் பங்களிப்பும் இடம்பெற விரும்பினால் காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத் தலைவர் (0774645244) அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்புகளை வழங்க முடியும்.Comments