01.07.2013- காரைதீவு பிரதான வீதியில் வீதிவிபத்து..

posted Jul 1, 2013, 8:43 AM by Web Team -A   [ updated Jul 1, 2013, 8:51 AM ]
காரைதீவு பிரதான வீதியில் இன்று சுமார் மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் பாரிய காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு உடனடியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மிக அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் மிகைவேகத்தில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு சகோதர இன இளைஞர்கள் முன்னால் பயணம் செய்து பாதையின் வலப்பக்கமாக திரும்ப எத்தனித்த கப் ரக வாகனத்தின் முன்பகுதியில் சிக்கண்டதால் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் இருவரும் நேரடியாக கண்ணகையம்மன் ஆலயத்தின் மதில்சுவர் மூலையில் மோதுண்டு படுகாயமடைந்தனர். பின்னர், சம்பவங்களை நேரடியாக கண்டுகொண்டிருந்த வீதிப்போக்குவரத்துப் பொலிசார் காயமடைந்த இரு இளைஞர்களையும் உடனடியாக வைத்தியசாலைக்க கொண்டு சென்றதுடன் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.

நன்றி: கவிதாஸ் 

karaitivunews.com


Comments