01.07.2013- மோகன்–கணேஷ் வெற்றி கிண்ண ஆரம்ப போட்டிகள்..

posted Jul 1, 2013, 9:53 AM by Web Team -A   [ updated Jul 1, 2013, 11:34 AM ]

1. விவேகானந்தா அணி வெற்றி..

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண 20-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியானது 2013.06.30 மு.ப. 9.30 மணிக்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம், ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜொலி கிங்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பினைத் தெரிவுசெய்தமைக்கு அமைய விவேகானந்தா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 132 ஓட்டங்ளைப் பெற்றனர். தனுஸ்காந் (42*), கஜேந்திரா (36) ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொலி கிங்ஸ் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்ளை மாத்திரம் பெற்று 08 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர். அவ் அணி சார்பாக திவாகரன் 25 ஓட்டங்ளைப் பெற்றார். பந்துவீச்சில் விவேகானந்தா அணி வீர்ர்கள் எழில் (3/26), தனுஸ்காந் (2/25) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். போட்டியின் பெறுமதிவாய்ந்த (Most Valuable Player of the Match) வீர்ராக தனுஸ்காந் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கான விருதினை அதிதியாகக் கலந்துகொண்ட காரைதீவுப் பிதேசசபையின் உறுப்பினர் கௌரவ. சு. பாஸ்கரன்  அவர்கள்வழங்கிவைத்தார்.

2. காரைதீவு விளையாட்டுக் கழக அணியினர் வெற்றி..

சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியானது 2013.06.30 பி.ப. 2.45 மணிக்கு காரைதீவு விளையாட்டுக் கழகம், மோகன் – கணேஷ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காரைதீவு விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினைத் தெரிவுசெய்தமைக்கு அமைய அவ் அணியினர் 18 ஓவர்கள் முடிவில் 01 விக்கட் இழப்பிற்கு 151 ஓட்டங்ளைப் பெற்றனர். திலீபதாஸ் (70*), லோகதாஸ் (54) ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மோகன் – கணேஷ் விளையாட்டுக் கழக அணியினர் 18 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுக்களை இழந்து 71 ஓட்டங்ளை மாத்திரம் பெற்று 80 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.( மோகன் – கணேஷ் விளையாட்டுக் கழகத்தின் முதலாவது போட்டித்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.) அவ் அணி சார்பாக சஞ்ஜீவன் 14 ஓட்டங்ளைப் பெற்றார். பந்துவீச்சில் காரைதீவு விளையாட்டுக் கழக அணி சார்பாக விஜய் (2/11) சிறப்பாக செயல்பட்டார். போட்டியின் பெறுமதிவாய்ந்த (Most Valuable Player of the Match)வீர்ராக திலீபதாஸ் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கான விருதினை அதிதியாகக் கலந்துகொண்ட காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழக உப தலைவர் திரு. சகாயநாதன் (செல்வம்) அவர்கள் வழங்கிவைத்தார்.

தகவல்: ரமணி

Comments