01.07.2015-ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்தில் பூரணை தின நிகழ்வுகள்..

posted Jul 1, 2015, 3:39 AM by Habithas Nadaraja
பூரணை தினமான (01.07.2015) இன்றைய தினம் வழமை போல காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்தில் விஷேட அபிசேகம், கோமாதா பூசை யாகபூசை அன்னதானம் என்பன சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 64வது குரு பூசையை முன்னிட்டு சித்தர் ரதபவனி (காரைதீவில் இருந்து களுவாஞ்சிக்குடி வரை ) ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதனை தொடந்து  24.07.2015ம் திகதி ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 64வது குரு பூசை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
                                                        
                                                                                            தகவல்-யுகராஜ், டிலக்சன்
Comments