01.08.15- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ தீர்த்தோற்சவம்: பாகம் - 01.

posted Jul 31, 2015, 6:48 PM by Liroshkanth Thiru
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ வாருடாந்த​ ஆடி மகோற்சவ​ இறுதி நாளாகிய​ இன்று (01.08.2015) காரைதீவு சமுத்திரக்கரையில் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் காரைதீவு ஸ்ரீ நந்தவன​ சித்திவிநாயகர் ஆலயத்தில் காவடி எடுக்கும்  பக்தர்களின் அலகு குத்தும் நிகழ்வு இடம் பெற்றதனை அடுத்து சுமார் 50 ற்கும் அதிகமான​ காவடிகள்  மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தைச்சென்றடைந்தன. 

முருகப் பெருமானுக்கு பூசை நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக​ பவனி வந்து  இறுதியாக சமுத்திரத்தை சென்றடைந்ததும் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் சுவாமி தேரில் அலகுக்காவடிகள்,பால்காவடிகள் சகிதம் ஆலயத்தைச் சென்றடைந்ததும் அலங்காரப் பூசைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது​.

Comments