01.08.15- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ தீர்த்தோற்சவம்: பாகம் - 02..

posted Aug 1, 2015, 4:08 AM by Liroshkanth Thiru   [ updated Aug 1, 2015, 6:02 AM ]
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ வாருடாந்த​ ஆடி மகோற்சவ​ இறுதி நாளாகிய​ இன்று (01.08.2015) காரைதீவு சமுத்திரக்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் காரைதீவு ஸ்ரீ நந்தவன​ சித்திவிநாயகர் ஆலயத்தில் காவடி எடுக்கும்  பக்தர்களின் அலகு குத்தும் நிகழ்வு இடம் பெற்றதனை அடுத்து சுமார்  50ற்கும் அதிகமான​ காவடிகள்  மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தைச்சென்றடைந்தன. 

முருகப் பெருமானுக்கு பூசை நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக​ பவனி வந்து  இறுதியாக​ சமுத்திரக்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான​ பக்த​ அடியார்கள் கலந்துகொண்டனர். 
பின்னர் சுவாமி தேரில் அலகுக்காவடிகள்,பால்காவடிகள் சகிதம் ஆலயத்தைச் சென்றடைந்ததும் அலங்காரப் பூசைகள், அன்னதானம் என்பனவும் நடைபெற்றன​.
மேலும் காவடிக்கு அலகு கழற்றும் நிகழ்வும் இடம்பெற்று. இனிதே நிகழ்வுகள் நிறைவடைந்தது. 

நன்றி: இணையகுழு
நேர்த்திக்கடனாக எடுக்கப்பட்ட காவடிகள்..

karaitivunews.comவிநாயகப்பெருமானுடன் , வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான்..

karaitivunews.comதீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட பக்த அடியார்கள்..

karaitivunews.comமாவடிக் கந்தனின் தீர்த்தோற்சவ நிகழ்வு..

karaitivunews.comநீராகார நிகழ்வுகளின் போது..

Comments