01.08.2013- காரைதீவு பிரதேச சபையின் இப்தார் நிகழ்வு..

posted Aug 1, 2013, 4:06 AM by Web Team -A
காரைதீவு பிரதேச சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய சகோதரர்களின் புனித நோன்பினையொட்டியதான இப்தார் நிகழ்வானது நேற்றையதினம்(31.07.2013) மாலை 5.30 மணிக்கு தவிசாளர் செ.இராசையா தலைமையில் காரைதீவுப் பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று  மாநகரசபை முதல்வர், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர், காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது கலந்துகொண்டிருந்த அரசியல் பிரமுகர்களின் உரையும் இடம்பெற்றன.

karaitivunews.com

Comments