01.08.2013- விபுலபுரியில் இந்துமத பிரதிநிதி ஸ்ரீ ரவிக்குமார் ஜீ..

posted Aug 1, 2013, 4:07 AM by Web Team -A
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கமும் இந்து ஸ்வயம் சேவக சங்கமும் இணைந்து இவ் ஏற்பாட்டைச் செய்திருந்த நிகழ்வொன்றில் உலகளாவியரீதியில் இந்து மதத்தின் பெருமைகள் பற்றி பரப்புரை செய்துவரும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் சர்வதேச இணை இணைப்பாளர் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ ரவிக்குமார் ஜீ இன்று வியாழக்கிழமை காலை காரைதீவுக்கு விஜயம் செய்தார். அவருடன் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஸ்ரீ இராதாகிருஸ்ணன் ஜீயும் வருகை தந்திருந்தார். முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலானந்த அடிகளார் அவதரித்த காரைதீவில் ஸ்ரீ ரவிக்குமார் ஜீயின்  உலகம் தழுவிய இந்துமதம் எனும் தலைப்பிலான சொற்பொழிவு விபுலானந்த மணி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. து. கொடியேற்றத்துடன் மாணவர்களின் பஜனையும் இடம்பெற்றது. குரு பூஜையும் நடைபெற்றது.
                            விரிவான செய்திகள் படங்களுக்கு கீழே..
தகவல்: காரைதீவு நிருபர்

சொற்பொழிவாற்றுகையில் :

உலகில் இந்துமதத்தின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது! உலகில் சாதனையாளர்கள் வெற்றி பெற்றவர்களுள் பெரும்பாலானோர் இந்துமதம் காட்டிய யோகாசனத்தைக் கடைப்பிடித்தவர்களாவர்.இன்று மேலை நாடுகளில் யோகா பாரிய செல்வாக்கு செலுத்திவருகிறது. நம்மவர்களில் பெரும்பாலானோர் குறைந்த நேரம் வேலைசெய்து கூடிய நேரம் ஓய்வெடுப்பவர்களாகவுள்ளனர். அதனால் சோம்பேறிகளாகின்றனர். அத்துடன் நோய்களையும் வலிய இழுத்துக்கொள்கிறார்கள். ஆனால் யோகா செய்பவர்கள் குறைந்த நேரத்தில் ஓய்வெடுத்து கூடிய நேரம் வேலைசெய்கிறார்கள். யோகாவிற்குரிய விசேட குணம் அது. இற்றைக்கு 500 வருடங்களுக்கு முதலே வேதத்தில் பூகோளம் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அவர் கடந்த 26ம் திகதி வந்திருந்தார்.இலங்கையில் 16 தினங்கள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தங்கியிருந்து இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்து இந்து மத பரப்புரைகள் செய்யவுள்ளார். இந்து அறிஞர்கள் புத்திஜீவிகள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மத பிரதிநிதிகள் மக்கள் என பல தரப்பட்டோர் மத்தியில் உரையாற்றிவருகிறார். கடந்த மாதம் அவுஸ்திரேலியாவின்   சிட்னி மற்றும் இந்தியாவின் மும்பாய் ஆகிய நகரங்களில்  இந்துமதத்தின் பெருமை பற்றி  பரப்புரை செய்த இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் சர்வதேச இணை இணைப்பாளர் ஸ்ரீ ரவிக்குமார் ஜீ கடந்த வாரம் வவுனியா முல்லைத்தீவு பொலநறுவை மன்னார் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று பரப்புரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments