01.09.16- 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் இலவசக் கல்விக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு..

posted Aug 31, 2016, 6:16 PM by Habithas Nadaraja
22.08.2016 தொடக்கம் 26.08.2016 வரை க.பொ.த சா/த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பினால் சுவாமி விபுலானந்தர் ஞாபகர்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றது. காரைதீவு, கல்முனை , பாண்டிருப்பு , களுவாஞ்சிக்குடி , மல்வத்தை , வீரமுனை பிரதேசங்களைச்சேர்ந்த 265 மாணவர்கள் பங்குபற்றினர். இறுதி நாள் நிகழ்வுகள் அமைப்பின் தலைவர் க.மதனன் தலைமையில்  வெள்ளி பி.ப.3.30 இற்கு நடைபெற்றது. அதிதிகளாக s. கணேஷ்  (மாணவர் மீட்பு பேரவை தலைவர் , பொறியியலாளர்) k. ஜெயசிறில் (தலைவர்,ஜேர்மன் நம்பிக்கை ஒளி, கிழக்கு மாகாணம்) T.ரதீஸ்குமார்(முகாமையாளர்,  சிலிங்கோ காப்புறுதி நிறுவனம் கல்முனை ) மற்றும் ஆசிரியர்கள் சிறப்பித்தனர். கடந்த வருடம் பரீட்சையில் 9 பெற்ற மாணவர்கள் மற்றும் கணிதம், தமிழ், விஞ்ஞான பாடங்களில் அதியுயர் புள்ளி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் இலவசக் கல்விக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு..Comments