01.09.16- காரைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த ஆவணி ஓண மகோற்சவம்..

posted Aug 31, 2016, 6:37 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த ஆவணி ஓண மகோற்சவம் இன்று (01.09.2016) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு தினமும் காலை அபிஷேக பூஜை, இரவு அலங்கார உற்வச பூஜை, அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வருதலும் இடம்பெறும்.எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சங்காபிஷேகமும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முத்துச்சப்பர ஊர்வலமும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதுடன் அன்று பகல் திருவூஞ்சல் இரவு திருக்கல்யாண நிகழ்வும் இடம்பெற்று 14 ஆம் திகதி புதன்கிழமை வைரவர் பூஜையுடன் உற்சவக் கிரியைகள் யாவும் இனிதே நிறைவு பெறும்.


Comments