01.09.2012- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம்..

posted Sep 1, 2012, 12:06 PM by Web Team -A

இன்று பி.ப 5.30 மணியளவில் காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள விளையாட்டுத்திடலில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் கௌரவ. இரா. சம்பந்தன், செயலாளர் கௌரவ மாவை. சேனாதிராஜா, கட்சியின் ஊடகப் பேச்சாளர் கௌரவ. சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,இவர்களுடன் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ளெரவ. சந்திரகாந்தன் சந்திரநேரு, கௌரவ. ஸ்ரீஸ்காந்தா போன்றோரும் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வெளியிட்டதுடன் அம்பாரை மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

படம்: ஜயந்தன் & சதீஸ்குமார்


Comments