01.10.14- நந்திக்கொடி ஏற்றும் வைபவத்துடன் சரஸ்வதி பூசை ஆரம்பம்..

posted Oct 1, 2014, 7:47 AM by Unknown user
முப்பெரும் தேவிகளில் கல்வித் தெய்வமாம் நாமகளிற்குரிய​ 2ம் நாள் பூசையாகிய​ இன்று காரைதீவு  பிரதேச​ செயலகத்தில் பிரதேச​ செயலாளர் திருமதி.சுதர்சினி  ஸ்ரீகாந் தலைமையில் நந்திக் கொடியேற்றும் வைபவத்துடன் சரஸ்வதி பூசை நிகழ்வுகள் ஆரம்பமாயின​. 
இதன்போது  ஸ்ரீமத் சுவாமி வேதானந்தா பஞ்சாரத்தீவம் காட்டி பூசை செய்தார்.

இதன்போது பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 
ஏனைய பிரதேச செயலகத்தில் இடம்பெறும் சரஸ்வதி பூசை நிகழ்வை விட சென்ற தடவையும், இம்முறையும் காரைதீவு பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூசை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றது.

இதன்போது கொலுவைத்தல் நிகழ்வு இடம்பெற்றதோடு ஸ்ரீமத் சுவாமி வேதானந்தா அவர்களால் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டுள்ள சரஸ்வதிக்குரிய சுலோகங்கள் தமிழில் சொல்லப்பட்டு பூசைகள் நடந்த

மேலும் ஸ்ரீ முருகன் ஐக்கிய அறநெறிப் பாடசாலை, இந்து சமய விருத்திச் சங்க அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதன்போதான புகைப்படங்களைக் கீழே காணலாம்.
நன்றி:அஜித்காந்,நிரோஷன்


karaitivunews.com


Comments