01.10.15- காரைதீவு Dream Park பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள்..

posted Oct 1, 2015, 9:12 AM by Liroshkanth Thiru
காரைதீவு Dream Park பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று 1ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகள் அனைத்தும் செல்வி.கே.திலகமணி ஆசிரியை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிக்காந் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக பொருளாதார உத்தியோகத்தர் திரு.ந.விநாயகமூர்த்தி, சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் T.கலா, பெற்றார் ஆசிரியர் சங்க செயலாளர் மதியளகன் , சமூக சேவையாளர் K.குமாரசிறி மற்றும் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் காரைதீவு மக்கள் வங்கி உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களிற்கான பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

நன்றி: விது


Comments