01.10.15- காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணிக் கச்சேரி..

posted Sep 30, 2015, 7:15 PM by Liroshkanth Thiru
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு காணி ஆணையாளர் நாயகத்தின் 2013/1 (LLRC) சுற்றறிக்கைக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விவசாய வகுப்பிலிருந்து ஆட்களைத் தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி நேற்று 30ம் திகதி காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிக் காணி ஆணையாளர்(LLRC) , உதவிப் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், குடியேற்ற உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.Comments