01.10.15- மதில் சுவர் சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி: காரைதீவில் சம்பவம்..

posted Sep 30, 2015, 8:12 PM by Liroshkanth Thiru
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 1ம் பிரிவில் மதில் சுவரின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ரா.தேசலக்சன் எனும் சிறுவன் பலியான சம்பவம் நேற்று 30ம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பெலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments