01.10.16- காரைதீவு பெண்கள் பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு..

posted Oct 1, 2016, 3:36 AM by Habithas Nadaraja   [ updated Oct 1, 2016, 3:42 AM ]
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்க வேண்டும் .

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சர்வதேச சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 

இந்த சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு பெண்கள் பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

முதல் நிகழ்வாக பாடசாலையிலிருந்து சிறுவர் உரிமைகளை பற்றிய பதாதைகளை தாங்கிய வண்ணம் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது காரைதீவின் மட்டுபடத்தப்பட்ட சில வீதிகளுடாக வலம்வந்து இறுதியாக பாடசாலையை வந்தடைந்தது. இதனை தொடந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்த கொண்டனர்.மேலும் இறுதியாக அதிபர், ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


ஜெயக்குமார் சஞ்ஜயன்

காரைதீவு பெண்கள் பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு..Comments