01.10.16- காரைதீவு றீம்பாக் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்..

posted Oct 1, 2016, 4:38 AM by Habithas Nadaraja   [ updated Oct 1, 2016, 4:51 AM ]
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலாளர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக காரைதீவு  றீம்பாக் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.விஜயதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச சபை செயலாளர் திரு. நாகராஜா,லயன்ஸ் கழக பிராந்திய முகாமையாளர் லயன் S. சிறிரங்கன் அவர்கள், லயன்ஸ் கழக கல்முனை நகர தலைவர் லயன் கே.தட்சனா மூர்த்தி அவர்கள் , காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்,பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

                                                                                               
                                                                                                  ஜெயக்குமார் சஞ்ஜயன்


காரைதீவு றீம்பாக் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்..


மேலதிக படங்களுக்குComments