01.10.2013- கலைமகள் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினவிழா..

posted Oct 1, 2013, 9:57 AM by Web Admin   [ updated Oct 1, 2013, 10:13 AM ]
காரைதீவு-12ம் பிரிவிலுள்ள கலைமகள் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினவிழாக் கொண்டாட்டமானது ஆசியா பவுண்டேசன் நிதியொதுக்கீட்டில் கப்சோ நிறுவனத்தின் வழிநடத்தலில் கலைமகள் பாலர் பாடசாலைக்கட்டிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் பிரதிநிதி எம்.முகமட், கலைமகள் பாலர் பாடசாலை ஆசிரியை செல்வி.சகுந்தலா, கிராமசேவக உத்தியோகத்தர் எஸ்.ஜெயசுந்தரம், சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ். நாகேந்திரன், விதாதா வள நிலைய வெளிக்கள உத்தியோகத்தர் கே. நவநீதன், மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் ஈற்றில் திறமைகளை வெளிக்காட்டிய  மாணவர்களுக்கான பரிசுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
தகவல்: நீதன்

karaitivunews.com

https://picasaweb.google.com/101530737754598021523/Kalaimakal
Comments