01.11.16- ஒரு சமுகத்தின் கலாசாரம் என்பது ஓர் ஆத்மா !* *கிழக்குகலைத்திருவிழாவில் இந்திய பேராசிரியர் ஸ்ரீபன் கூறுகிறார்..

posted Oct 31, 2016, 6:09 PM by Habithas Nadaraja
ஒரு சமுகத்தின் கலாசாரம் என்பது ஓர் ஆத்மா !*
*கிழக்குகலைத்திருவிழாவில் இந்திய பேராசிரியர் ஸ்ரீபன் கூறுகிறார்!**ஒரு சமுகத்தின் கலாசாரம் என்பது அச்சமுகத்தின் ஆத்மா. அந்தளவிற்கு அது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.இலங்கையின் குறிப்பாக தமிழர்களின் கலைகள் அற்புதமானவை.*


*இவ்வாறு கிழக்கிற்கான மூன்றுநாள் கலைத்திருவிழாவின்  இறுதிநாள் மாலை நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டுரையாற்றிய இந்தியாவின் தமிழ்நாடு திருநெல்வேலி அனோன்மயிணம் சுந்தரனாhர் பல்கலைக்கழகத்தின்
நாட்டுப்புறவியல்கலைத்துறைப்  பேராசிரியர் ஜி.ஸ்ரீபன் குறிப்பிட்டார்.*


*இறுதிநாள் கலைகளின் திருவிழா நேற்று சனிக்கிழமையன்று மாலை வேளையில் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் கிறஸ்ரி வரவேற்புரையுடனும் விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜெய;சங்கரின் அறிமுகஉரையுடன்
ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து கலைஞர்களின் ஆற்றுகைகள் இடம்பெற்றன.**அங்கு பேராசிரியர் ஸ்ரீபன் மேலும் பேசுகையில்:*

*கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்கானது அல்ல.இது உணர்வுபூர்வமான உயிர்நாடியாகும்.அவை உள்ளார்ந்த ரீதியானவை. அவை எமது பண்பாட்டியலின் இருப்பைப் பேணிப்பாதுகாப்பன.*

*இங்கு இலங்கையின் பல இனத்தர்களின் கலைகளை ஒரே மேடையில் காணும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன். மிகவும் அருமையாகவிருந்தது.*

*பழம்பெரும் கலைகளுக்கு புத்துயிர் அளிப்பதுபோல் பல கலாசார நிகழ்வுகள் அரங்கேறின.அவை சாகாவரம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழக அழகியல்துறையினர் நல்ல பங்களிப்பைச்செய்துள்ளனர்.*

*இங்கு சமுக நல்லிணக்கத்திற்கு கலைகள் முக்கிய பாகமாகும் என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள இஸ்லாமிய அனைத்து இனத்தவர்களினதும் போத்துக்கீச வேடுவர் இனக்குழுமங்களினது கலைகளும் ஒரேமேடையில் கண்டோம்.*

*அனைத்தையும் ஒருகளத்தில் சங்கமிக்கவைத்த ஏற்பாட்டுக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.*


*ஈழத்து தமிழிசை பாரம்பரியம் உயர்சிறப்பு மிக்கவை!*


*ஈழத்து தமிழிசைப் பாரம்பரியம் உயர் சிறப்பு மிக்கவை. 1970 – 1980 களில் வெளிவந்த ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் பொப்பிசைப்பாடல்கள் ஈழத்து சினிமாப்பாடல்கள் மேடைநாடகப்பாடல்கள் எல்லாம் உயிரோட்டமானவை.அவற்றுக்கு
புத்துயிரளிக்கவே எமது நிறுவனம் இசைக்குழுவை தயார்செய்துள்ளது.எம்மோடுகைகோருங்கள்.*

*இவ்வாறு இறுதிநாள் மாலை நிகழ்வில் தலைமைவகித்து  உரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்  நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜெய;சங்கர் குறிப்பிட்டார்.*

*அவர் மேலும் உரைநிகழ்த்துகையில்;*

*எமது இசைக்குழுவை இளங்கலைஞர் யூட் நிரோசன் வழிநடாத்துகின்றார்.இதனூடாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களை இளந்தலைமுறையினருக்கு எத்திவைப்பது மாத்திரமல்லாமல் மேலும் பல நம்கலைஞர்களை ஊக்குவித்து பாடல்களை இயற்றுவதும் நோக்கமாகவுள்ளது.*

*ஈழத்துப்பாடகர்கள் இசையமைப்பாளர்கள் கலைஞர்கள் நடிகர்கள் எல்லாம் சாதாரணமானவர்ளல்ல. அவர்களோடு இணைந்து அவர்கள் பாதையில் எமது இளம் ஆளுமைகள் பயணிக்கவுள்ளன.*

*இம்மூன்றுநாட்களும் எம்மோடு ஒத்தழைத்த பிரதேசசெயலாளர் முதல் அதிபர்கள் ஊடவியலாளர்கள் சாரணர்கள் வரை அனைவரையும் நன்றியுடன் பாராட்டுகின்றோம்.என்றார்.*

*கலைநிகழ்வுகள் வரிசையில் முதலில் களுதாவளை கலைஞர்களால் பறைமேளமும் பின்னர் அக்கரைப்பற்று கலைஞர்களால் பக்கீர்பைத் நிகழ்வும் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து இறக்காமம் கலைஞர்களால் வண்ணமும் அக்கரைப்பற்று கலைஞர்களால்
திருமணஊர்வலமும் **விநாயகபுரம் கலைஞர்களால் வெடியரசன் கூத்தும் இடம்பெற்றது.**மட்டக்களப்பு கலைஞர்களால் கபறிஞ்சா நிகழ்வும்கிண்ணியா கலைஞர்களால் வாள்வீச்சுஇ தீப்பந்த வீச்சும் இடம;பெற்றது.*

*பின்னர் பட்டிப்பளை பிரதேச கலைஞர்களால் வாழ்வியல் பாடல் பாடப்பட்டது. கலைகளின்திருவிழா இணைப்பாளர் அ.விமல்ராஜ் அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டது. இறுதியாக நம்நாட்டு கலைஞர்களின் மெல்லிசை கானங்களுடன் மிகவும் சிறப்பாக பலரது
ஆட்டத்துடனும் கரகோஷங்களுக்கு மத்தியில் இனிதே நிறைவுற்றது.*

*காரைதீவு  நிருபர் சகா*

Comments