02.11.16- புதுமை புனைய அடியெடுத்து வைக்கும் விக்கினேஸ்வரா..

posted Nov 1, 2016, 7:01 PM by Web Admin   [ updated Nov 1, 2016, 7:07 PM ]
காரைதீவு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் பழமையான கழுத்துப்பட்டியினை மாற்றி புதியதும் அழகானதுமாக கழுத்துப்பட்டியினை அண்மையில் பாடசாலை அதிபராக கடமையேற்ற சீ.திருச்செல்வம் அவர்களின் முழுமுயற்சியினாலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் வடிவமைத்து நேற்றையதினம் பாடசாலையின் நூலக அறையினுள் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் சீ.திருச்செல்வம் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 
மேலும் கருத்துரைத்த பாடசாலை அதிபர், இதுஒரு ஆரம்பநிலைப் பாடசாலையாக இருப்பதாலும் இப்பிரதேசத்தில் உள்ள பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருப்பதனால் பாடசாலையினை அபிவிருத்தி செய்தலில் சிலபின்னடைவுகளை தாம் எதிர்கொள்வதாகவும், பாடசாலையை அண்டிய பிரதேசத்திலுள்ளவர்கள் சுனாமியின் பின்னராக இடம்பெயர்ந்து பிறபிரதேசங்களுக்கு சென்றமையாலும் பாடசாலைக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், விரைவில் பாடசாலை வளாகத்தினுள் முன்பள்ளி ஒன்றினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பாடசாலை அபிவிருத்திக்காக பழையமாணவர்களின் பூரண ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Comments