02.12.17-ஆசிரியர் பற்றாக்குறை தேவை குறித்து கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளருடன் பா.அ.சபை சந்திப்பு..

posted Dec 2, 2017, 3:16 AM by Habithas Nadaraja   [ updated Dec 2, 2017, 3:32 AM ]
விபுலானந்தாவின் ஆசிரியர் பற்றாக்குறை தேவை குறித்து கல்முனை
வலயக்கல்விப்பணிப்பாளருடன்  பா.அ.சபை சந்திப்பு!

காரைதீவு விபுலானந்தா மததிய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபையினர் நேற்று கல்முனைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீலுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

அவருடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.மயில்வாகனம் உடனிருந்தார். பாடசாலை அபிவிருத்திச்சபை சார்பில் தலைவர் தி.வித்யாராஜன்(அதிபர்) செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உறுப்பினர்களான வி.விஜயசாந்தன் எஸ்.மணிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விபுலானந்தாவின் தேவைகள் குறைபாடுகள் குறித்து சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

உயர்தரத்தில் இரசாயனவியல் கற்பித்த ஆசிரியை திருமதி சுதாகரி பிரேமானந்தா ஓய்வுபெற்றுள்ளதால் அதற்கு பட்டதாரி ஆசிரியரொருவர் நியமிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்   தகவல்தொழினுட்பப்பாடத்திற்குப்பொறுப்பாக விருந்த ஆறுமுகம் பார்த்தீபன் இலங்கை கல்வி நிருவாகசேவைக்கு தெரிவாகிச்சென்றிருப்பதால் அவ்வெற்றிடம்
நிரப்ப்படவேண்டும். மற்றும்நாடகமும் அரங்கியலும் சிங்களம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரிய பற்றாக்குறை நிலவுவதாகச் சுட்டிக்காட்டி அவையும் நிரப்ப்படவேண்டியதன் அவசியத்தை குழுவினர் சுட்டிக்காட்டினர்.

புதிய பட்டதாரி நியமனத்தின்போது முடியுமான ஆசிரியர்களை நிரப்பலாம். வலயத்திற்குள் இடமாற்றம்  செய்வதானாலும் கல்விச்செயலாளரின் ஒப்புதல்பெறவேண்டியுள்ளது.சுகாதாரத்தொழிலாளி என்று இனி யாரையும் நியமிக்கமுடியாத நிலையுமுள்ளது.

மேலும் தொழிட்ப பீடம் தொடர்பாகவும் என்சிபிஎஸ். திட்டத்தின்கீழான5மில்லியன் ஒதுக்கீடு மற்றும் அமுலாக்கம் தொடர்பாக குழுவினர்
எடுத்துரைத்தனர்.

பதிலளித்த பணிப்பாளர் ஜலீல் அடுத்தவருடம் இத்தொகுதி பாடசாலைகளஅனைத்திற்கும் ஒரேயடியாக நிதி  கிடைக்கும் என கூறினார்.
Comments