01.12.17- சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தொடர்பான முன்னோடிக்கூட்டம்..

posted Nov 30, 2017, 6:03 PM by Habithas Nadaraja
சர்வதேச எய்ட்ஸ் தினம் (டிசம்பர் 1) இன்றாகும். கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகம் இத்தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

இத்தினநிகழ்வுகளை இம்முறை காரைதீவில் நடாத்த கல்முனை சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனையின் தொற்றாநோய் மற்றும் பாலியல்நோய் எய்ட்ஸ் பிரிவுக்குப்பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர். எ.ஆர்.எம்.ஹாரீஸ் திட்டமிட்டுள்ளார்.

அதற்கான முன்னோடிக்கூட்டமொன்றை நேற்று காரைதீவு பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் நடாத்தினார்.

கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர்.தஸ்லிமா(நிந்தவூர்) டாக்டர் றிஸ்னீன்முத்(காரைதீவு) டாக்டர் அஜூவத்(சாய்ந்தமருது) டாக்டர் சமீர்(சம்மாந்துறை) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பொதுச்சுகாதாரபரிசோதகர்களின் தலைமைப்பொறுப்பதிகாரி பி.பேரம்பலம் மற்றும் தஸ்தகீப் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் ஏற்பாட்டில் பலதுறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
டிசம்பர் 4ஆம் திகதி திங்கள்கிழமை இத்தினத்தை விழிப்பணர்வு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடாத்துவது என்று தீர்மானதாகியது.

காரைதீவு  நிருபர் சகா

Comments