01.12.19- சுவாமி நடராஜானந்தா ஜீயின் 116வது ஜனனதின நிகழ்வு..

posted Nov 30, 2019, 5:46 PM by Habithas Nadaraja   [ updated Nov 30, 2019, 5:47 PM ]
காரைதீவு பெற்றெடுத்த மற்றுமொரு இ.கி.மிசன் சுவாமி நடராஜானந்தா ஜீயின்   116வது  ஜனனதினவிழாவை காரைதீவில் (29.11.2019) காலை காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கம் அதன் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடாத்தியது.

காரைதீவு பிரதேசசெயலக முன்றலில் சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டு விழாச்சபையால் 2004இல் நிறுவப்பட்ட சுவாமி நடராஜானந்தரின் திருவுருவச்சிலையடியில் இவ் ஜனனதினவிழா கோலாகலமாக நடைபெற்றது.திவுருவச்சிலைக்கு மலர்மாலையணிவித்தல் புஸ்பாஞ்சலி  வேதபாராயணம் பாடுதல் சிறப்புச்சொற்பொழிவு என்பன நடைபெற்றது.Comments